alert VoICE – Abdul Wahab

alert-voice-abdul-wahab

alert VoICE – Abdul Wahab

கண்ணீர் மல்க முதல் உதவி செய்த தருணம்.

வியாழன் (06/09/2018) மாலை நான்கு மணி நானும் என் நண்பனும் வேலை முடித்து வீடு திரும்பும் நேரம் ஒரகடம் சந்திப்பில் ஒரு பெரிய கூட்டம் (சுமார் 50 பேர் இருந்திருப்பார்கள்). சேவை சாலையில் ஒரு பத்திற்கும் மேற்பட்ட அலுவலக பேருந்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். ரோட்டின் நடுவில் மளிகை சாமான்கள் கொட்டி கிடக்கிறது. சாலை நடுவில் ரத்த வெள்ளத்தில் சுமார் 30 வயது உள்ள ஆண் தொலைபேசியில் ” பாலு காலு ஒடஞ்சிரிச்சி பாலு இங்க யாருமே எதுமே செய்ய மாற்றங்க பயமா இருக்கு பாலு” என்று அழுத படி பேசிக்கொண்டிருக்கிறார்.

நானும் என் நண்பனும் அருகில் சென்றோம். அங்குள்ள கிராம வாசிகள் அவரை ரோட்டின் ஓரம் எடுத்து செல்ல முயன்றனர். அவரது இடது கால் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடைந்து இருந்தன. வாய், நெற்றி மற்றும் கால் ஆழமாக வெட்டி இருந்தது. ரத்த கசிவு இல்லை. அவர்களை தடுத்து அங்கேயே முதல் உதவி செய்யலாம் என்று சொன்னேன். ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரம் என அருகில் இருந்த காவலர் சொன்னார். ஷானை அருகில் நீல கம்பு இருக்கிறதா என பார்க்க சொன்னேன். தார் ரோட்டின் சூடு தாங்காமல் அவர் உடைந்த காலை அசைக்க முயன்றார். கால் யூ போல் வளைந்தது. அவரிடம் காலை அசைக்க வேண்டாம் என கூறி. சில ஆறுதலான வார்த்தைகள் கூறினேன். அவர் கண்ணீரோடு சார் சூடு தாங்க முடியல சார். எலும்பு வெளிய வருது சார். பயமா இருக்கு சார் என்றார். நான் கால் சேரி ஆயிடும் நான் உங்க கால நேர வெச்சி கட்டு போட்டுரேன். தயவு செய்து அசைக்காம இருங்க என்று சொன்னேன்.

அங்குள்ள காவலர்கள் இரண்டு பேரை போக்குவரத்தை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள். இவரை நகர்த்தினாள் இன்னும் மோசம் ஆகிவிடும் என்றதும் நாங்க பாத்துகிறோம் சார் நீங்க ஆகுறத பாருங்க என்றனர். ஷான் மற்றும் இன்னொரு காவலர் ஒரு பிளேக்ஸ் பாணரை எடுத்து வந்தனர். அதில் உள்ள ரீப்பர் கட்டையை சிறு துண்டுகளாக உடைத்தோம். கட்டுவதற்கு கயறு கேட்ட போது அங்கு கொழுத்து வேலை செய்யும் பெண் தன் மேல் போட்டிருந்த துணியை கொடுத்து தம்பி இதை கிழிச்சு யூஸ் பண்ணிக்கோங்க உங்கள மாதிரி எல்லாம் எனக்கு பண்ண தெரியாது. என்னால முடிஞ்சுது என துண்டை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு துண்டுகளை முட்டிக்கு மேல் கீழாக வைத்து கட்டினேன். பின் நீளமான துண்டுகளை தொடை மற்றும் கீழ் காலில் வைத்து கட்டி. இரண்டு கால்களையும் ஒன்றாக கட்டி முடித்த வேளையில் ஆம்புலன்ஸ் வந்தது. உடனே அவரை அதில் அனுப்பி வைத்தோம்.

நாங்கள் விபத்து நடந்து 20 நிமிடம் கழித்து தான் சென்றோம். அது வரை எந்த ஒரு உதவியும் அவருக்கு கிடைக்க வில்லை. அவர் தொலைபேசியில் கதறியது நெஞ்சை பதை பதைக்க செய்தது.

கொழுத்து வேலை செய்யம் பெண் தன் மாரை மறைக்கும் துண்டை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கண்ணீரோடு அங்கிருந்து சென்றோம்.

அலெர்ட் குடும்பத்தினருக்கு நன்றிகள்…

By Abdul Wahab